ரஜினி சார் கூட அந்த மாதிரி ரோலில் நடிக்கணும்! வாணி போஜன் ஆசையை பாத்தீங்களா?

Vani Bhojan and rajini

வாணி போஜன் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வரும் வாணி போஜன் தற்போது சட்னி சாம்பார் என்கிற வெப் சீரிஸில் ந டித்து முடித்துள்ளார். இந்த வெப் சீரிஸை இயக்குனர் ராதாமோகன் இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு, மைனா, கிறிஸ்ஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த வெப் சீரிஸ் கடந்த ஜூலை 26-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த வெப் தொடரின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல்களுக்கு நடிகை வாணி போஜன் பேட்டி கொடுத்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டபோது தான் நடிக்க விரும்பு கதாபாத்திரம் பற்றியும் ரஜினி படத்தில் நடிக்க ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய வாணி போஜன் ” எனக்கு பொதுவாகவே பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் தான் பிடிக்கும். எனவே, ஒரே நேரத்தில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமும், பெரிய ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நான் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் தான் நடிப்பேன்” என்று கூறினார்.

பிறகு தொகுப்பாளர் வாணிபோஜனிடன் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரில் ஒரு ஹீரோவுக்கு மகளாகவும் ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் இதில் யாரை எதற்கு தேர்வு செய்வீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். இந்த கேள்வியை கேட்டவுடன் சிரித்துக்கொண்டே பதில் கூறிய வாணி போஜன் ” எனக்கு 2 பேரையும் ரொம்பவே பிடிக்கும் இரண்டு பேருக்கும் மகளாக நடிக்கவேண்டும் என்று கூறினார்.

பிறகு ஒருவரை தான் தேர்வு செய்யவேண்டும் என்று கூற அதற்குபதில் சொன்ன வாணி போஜன் ” எப்படியும் என்ன ட்ரோல் பண்ண போறாங்க என்று கூறி ரஜினி சாருக்கு மகளாக நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என கூறியுள்ளார். மேலும், வாணி போஜன் தற்போது ஆர்யன் , கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்