வயநாடு நிலச்சரிவு – வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி, நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி..!

PM Modi - Rahul Gandhi

வயநாடு : கேரளாவில் உள்ள வயநாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால் குறிப்பாக மலப்புரம், கன்னூர் போன்ற இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக நேற்று 2 மணியளவில் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், 20 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. அதை தொடர்ந்து பலரும் இன்னுமும் நிலச்சரிவில் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகளையும் தீவிர படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

மேற்கொண்டு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணமாக ரூ. 2 லட்சமம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-ம் நிவாரணமாக வழங்கப்படும்”, என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தியும், வயநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவு மிகவும் வேதனை அளிக்கிறது என்று அவரது எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார். இது குறித்து பதிவிட்ட அவர், “தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நிலச்சரிவில் சிக்கியவர்கள் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

கேரள முதல்வர் மற்றும் வயநாடு மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். நானும் மத்திய அமைச்சர்களிடம் பேசி, தேவையான உதவிகளை வழங்க கோரிக்கை இருக்கிறேன். மீட்பு பணிகளில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த பணியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்”, என்று பதிவிட்டிருந்த்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்