அதிகரிக்கும் வயநாடு நிலச்சரிவு உயிரிழப்புகள்… மீட்புப்பணிகள் தீவிரம்.!

Kerala Wayanad landslide

கேரளா: தென்மேற்கு பருவமழை கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக பெய்து வருகிறது. கனமழை காரணமாக நேற்று நள்ளிரவில் வயநாடு சுற்றுவட்டார பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர்.

கனமழை காரணமாக, வயநாடு முண்டைக்கை பகுதியில் நள்ளிரவு 1 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்ததாக சூரல்மலை பகுதியில் அதிகாலை 2 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தான் சுமார் 500 குடும்பங்கள் சிக்கியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது .

இந்த நிலச்சரிவின் காரணமாக அட்டமலையில் இருந்து முண்டகை வரையில் போக்குவரத்துக்கு இருந்த பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இதனால் அப்பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க மாநில மற்றும் மத்திய மீட்புப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மீட்புப்பணிகளுக்காக கோவை விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் கேரளாவுக்கு விரைந்துள்ளன.

இதுவரை சூரல்மலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் இன்னும் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்பு உதவிகளுக்கு கேரள அரசு 8086010833, 9656938689 ஆகிய உதவி எண்களை அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்