மகள் அதிதி ஷங்கருக்கு பிரமாண்ட வாய்ப்பு கொடுக்கும் ஷங்கர்? கேட்கவே பயங்கரமா இருக்கே!!!
ஷங்கர் : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கடைசியாக கமல்ஹாசனை வைத்து இயக்கியிருந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து படுதோல்வியை அடைந்துள்ளது. அந்த தோல்வியை எல்லாம் தொடர்ந்து ஷங்கர் அடுத்ததாக ராம் சரணை வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் கேம்செஞ்சர் படத்தில் முழு ஆர்வத்தை காட்டி அந்த படத்தினை இயக்கிக் கொண்டு வருகிறார்.
இந்தியன் 2 தோல்வி அடைந்துள்ள காரணத்தினால் அடுத்ததாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையாக வேலை செய்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக எந்த ஹீரோ வைத்து படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் எழுந்த நிலையில் அவர் அடுத்ததாக வேள்பாரி நாவலை கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் செலவு செய்து எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இருப்பினும் வேள்பாரி நாவலை அவர் படமாக இயக்க உள்ளது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் அவர் அடுத்ததாக வேள்பாரி நாவலை தான் படமாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க ஷங்கர் அவருடைய மகளும், நடிகைமான அதிதி சங்கரை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விருமன், மாவீரன் ஆகிய திரைப்படத்தின் வெற்றிகளை தொடர்ந்து அடுத்ததாக தொடர்ச்சியாக சிறிய சிறிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த அதிதிக்கு இந்த வாய்ப்பு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் சினிமா வட்டத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. விரைவில் அவர் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கான அறிவிப்பு வேள்பாரி படம் குறித்து அறிவிப்பும் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
உண்மையில் இந்த படத்தில் அதிதி சங்கர் நடிக்கிறாரா இல்லையா என்பது பற்றி அதிதி சங்கரோ அல்லது ஷங்கரோ விளக்கம் கொடுத்தால் மட்டும்தான் தெரிய வரும். மேலும் 1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த வேள்பாரி திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.