பாரிஸ் ஒலிம்பிக்-10 மீ ஏர் ரைபிள் ! வெண்கல பதக்கத்தை தவறவிட்டார் அர்ஜூன் பபுதா ..!
பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் 10 மீ. ஏர் ரைபிள் இறுதி போட்டியில் இந்திய அணியின் சார்பாக அர்ஜுன் பபுதா விளையாடி வந்தார். தகுதி சுற்றில் அபாரமாக விளையாடிய இவர் இறுதிப் போட்டிக்கும் சிறப்பாக விளையாடி தகுதி அடைந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் நடைபெற்ற இந்த ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 2-வது பதக்கத்தை பெற்று தருவார் என இந்திய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் 4-ஆம் இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை தவற விட்டுள்ளார்.
இந்த பத்து மீ. ரைபிள் போட்டியில், சீனாவை சேர்ந்த ஷெங் லிஹாவோ 252 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து ஸ்வீடன் நாட்டைச் சென்ற வீரரான விக்டர் லிண்ட்கிரென் 251 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மேலும், 250 புள்ளிகள் எடுத்து க்ரோஷியா நாட்டை சேர்ந்த வீரரான மீரான் மரிசிச் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். தொடக்கத்தில் நன்றாக விளையாடி வந்த அர்ஜூன் பபுதா அதன் பிறகு புள்ளிகளை எடுக்க கோட்டை விட்டதால், வெண்கல பதக்கத்தை தவற விட்டுள்ளார்.
அதே போல நேற்று பெண்களுக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் வெண்கலம் பதக்கம் வென்று இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்று அசத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.