ஹேமந்த் சோரன் ஜாமீனில் தலையிட முடியாது.! உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!
டெல்லி : ஜார்கண்ட் மாநிலத்தில் நிலமோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த டிசம்பர் 31இல் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கைது செய்தனர். பின்னர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார். சம்பாய் சோரன் புதிய முதல்வரானார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ஹேமந்த் சோரனை கைது செய்ததற்கு போதிய முகாந்திரம் இல்லை என கூறி அவருக்கு ஜாமீன் வழங்கியது மாநில உயர்நீதிமன்றம்.
இதனை தொடர்ந்து, ஜாமீனில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் மாநில முதல்வரானார். ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு அளித்த ஜமீனுக்கு எதிராக, அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனில் தலையிட விரும்பவில்லை என கூறி உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை ஏற்க மறுத்துவிட்டது.