தொடரை கைப்பற்றி மாஸ் காட்டிய இந்திய அணி..! இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம் ..!
SLvsIND : இலங்கை அணியுடனான சுற்றுப்பயண தொடரின் 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்த இலங்கை அணி, அதன்பின் மிடில் ஓவர்களில் தங்களது பேட்டிங் ஆதிக்கத்தை நன்றாக செலுத்தினார்கள். முக்கியமாக குசல் பெரேரா நிலைத்து விளையாடி 53 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார்.
அவரை தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற இறுதியில் 20 ஓவருக்கு இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பாக ரவி பிஸ்னாய் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, அர்ஷதீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதன் பிறகு 162 ரன்கள் எடுத்தால் வெற்றியான களம் இறங்கியது இந்திய அணி.
அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. அதன் பிறகு DLS முறைப்படி 20 ஓவர்கள் விளையாட உள்ள போட்டியை 8 ஓவராகவும் 161 ரன் இலக்கை 78 ரன்களாகவும் குறைத்தனர்.
அதை தொடர்ந்து இந்திய அணியில் சஞ்சு சாம்சனும், ஜெய்ஸ்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்கள். அதில் சாம்சன் முதல் பந்தலையே போல்டாகி 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
அதன் பிறகு அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் 12 பந்துக்கு 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா நிலைத்து விளையாடி 6.3 ஓவர்களில் 81 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற வைத்தனர்.
இதனால், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை (DLS முறைப்படி) பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றி உள்ளது.