அமெரிக்க தேர்தல் : ட்ரம்பை மிஞ்சிய கமலா ஹாரிஸ்? ஒபாமா ஆதரவின் எதிரொலியா?

Kamala Harris - Barack Obama

அமெரிக்கா : இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் 5-ம் தேதி அன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பாக டொனால்டு ட்ரம்பும் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் அதன் பிறகு வயது முதிர்வு, பேச்சில் தடுமாற்றம் மற்றும் மந்தமான செயல்பாடு போன்ற காரணங்களால் ஜோ பைடன் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதனால், அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து பைடன் விலகினார். அதன்பின் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை அத்பர் கமலா ஹாரிசை முன்மொழிந்தார்.

அப்போதிலிருந்து ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் கமலா ஹாரிசின் கை ஓங்கியது என்றே கூறலாம். இருந்தாலும், தொடர்ந்து 2 முறை ஜனாதிபதியாக இருந்த ஒபாமா, கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஆனால், நேற்று முன்தினம் அவர்,“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஆதரவு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் முன்னாள் அதிபர் டிரம்பை விட துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு சற்று அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. அந்த கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிசுக்கு 44% சதவீதம் பேரும், டோன்லட் டிரம்புக்கு 42% சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக, ஒபாமா கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்ததால் தான் இந்த கருத்து கணிப்பு கமலா ஹாரிஸுக்கு சாதகமாக வந்துள்ளது என அமெரிக்க மக்கள் கூறி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்