சீமராஜா படத்தை வெளியிட தடை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிவகார்த்திகேயன் – இயக்குனர் பொன்ராம் கூட்டணியில் மூன்றாவதாக வெளிவரவுள்ள திரைப்படம் சீமராஜா. இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் படம் வெளியாக உள்ளது.
இப்படத்தை 24AM Studios தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார். சமந்தா ஹீரோயினாகவும், சிம்ரன் வில்லியாகவும், சூரி காமெடி ரோலிலும் நடிக்கிறார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தாலும் படம் முன்கூட்டியே இணையத்தில் வெளியாவதால் பட வசூலில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு படக்குழு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது.
இதனை விசாரித்த நீதிபதி படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
DINASUVADU