வெற்றியுடன் தொடங்குமா கம்பீர் படை? இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை ..!
SLvIND : நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வெற்றி பெற்று அசத்தியது. மேலும், இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிடின் பதவி களமும் முடிவடைந்திருந்தது.
அதன் பிறகு, கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று தற்போது பயிற்சியாளராக இந்திய அணியை முதல் சுற்று பயண தொடருக்கு வழிநடத்த உள்ளார். சமீபத்தில் இந்த தொடருக்காக இந்திய அணியை பிசிசிஐ அறியவித்திருந்தது, அது ரசிகர்களிடையே சற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், அது தொடர்பாக நடத்தப்பட்ட சமீபத்தில் கம்பீரும், அணி தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கரும் பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தித்து பேசினார்கள். அதில் ரசிகர்களின் அனைத்து விதமான கேள்விக்கும் இருவரும் பதிலளித்திருந்தனர். இருப்பினும், ரசிகர்கள் மற்றும் பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் மேற்கொண்டு பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தற்போது, இன்று இலங்கை அணியுடனான சுற்று பயணத்தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடரில் பயிற்சியாளர் கம்பீர் எப்படி இந்திய அணியை வழி நடத்த போகிறார். எப்படி எல்லாம் புதிய அணுகுமுறையை கையாள போகிறார் என்று பெரும் அளவு எதிர்பார்ப்பு என்பது இருந்து வருகிறது.
இலங்கை மற்றும் இந்திய அணி மோதும் முதல் டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியை இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 சேனலில் தமிழில் பார்க்கலாம். மேலும், மொபைலில் சோனி லிவ் ஆப்பிலும் இந்த போட்டிகளை காணலாம்.
இந்த தொடருக்காக எதிர்ப்பார்க்கப்படும் வீரர்கள் :
இந்திய அணி :
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
இலங்கை அணி :
குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சரித் அசலங்கா (கேப்டன்), பாத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷனக, கமிந்து மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன, பினுர பெர்னாண்டோ.