மீண்டும் அதிகரிக்க தொடங்கிய தங்கம் விலை.! சவரனுக்கு ரூ.400 உயர்வு…

தங்கம் விலை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த 4 நாள்களாக சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை, மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த 23ஆம் தேதி தாக்கலான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்கவரி 6%ஆக குறைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 4 நாள்களில் மட்டும் அதன் விலை ரூ.3,280 குறைந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 22ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.54,600க்கு விற்பனையான நிலையில், 4 நாள்களாக தொடர்ந்து சரிந்து நேற்று ரூ.51,320க்கு விற்பனையானது. இப்பொழுது, மீண்டும் உயர தொடங்கி இருப்பதால், நகை பிரியர்கள் அதிச்சியில் உள்ளனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,720க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,465க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89க்கும், ஒரு கிலோ ரூ.89,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (26-07-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415க்கும் விற்பனையானது. மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025