சென்னை மக்கள் கவனத்திற்கு.., ஹேப்பி ஸ்ட்ரீட்..! முக்கிய வீதியில் போக்குவரத்து மாற்றம்.!

Happy Street

சென்னை: போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மக்கள் வாகன சத்தங்கள் மறந்து மகிழ்ச்சியாக இருக்க கடந்தாண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் நிகழ்வு “ஹாப்பி ஸ்ட்ரீட் (Happy Street)” ஆகும். இந்த நிகழ்வு நடைபெறும் நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த வாகனத்திற்கும் சாலையில் அனுமதி இல்லை. அப்போது குறிப்பிட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

அவ்வாறு, வரும் ஜூலை 28ஆம் தேதி சென்னை அண்ணாநகர் பகுதியில் HAPPY STREET நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்கான போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி , K4 அண்ணாநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்பட்ட இரண்டாவது நிழற்சாலையில் 28.07.2024 அன்று “HAPPY STREET” என்ற நிகழ்வு நடைபெற இருப்பதால், இரண்டாவது நிழற்சாலையில் புளுஸ்டார் சந்திப்பு முதல் 2வது நிழற்சாலை மற்றும் 3வது பிரதான சாலை சந்திப்பு (நல்லி சில்க்ஸ்) வரை காலை 6.00 மணிமுதல் 09.00 மணிவரை போக்குவரத்து முற்றிலுமாக தடைசெய்யப்பட்டு மேற்கண்ட நிகழ்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே, திருமங்கலத்திலிருந்து அண்ணாநகர் ரவுண்டானா சிந்தாமணி நோக்கி செல்லும் வாகனங்கள் புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் இடதுபுறம் திரும்பி 6வது நிழற்சாலை, K4 PS ரவுண்டானாவை அடைந்து சிந்தாமணி, ரவுண்டானாவுக்கு செல்ல வேண்டும்.

திருமங்கலத்திலிருந்து அமைந்தகரை, ஈ.வெ.ரா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையில் வலதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலையை அடைந்து அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்லவேண்டும்.

அண்ணாநகர் ரவுண்டானாவிலிருந்து திருமங்கலம் நோக்கி செல்லும் வாகனங்கள் 2வது நிழற்சாலையில் நல்லி சில்க்ஸ் அருகே 3வது பிரதானசாலையில் இடதுபுறம் திரும்பி 4வது நிழற்சாலை வழியாக திருமங்கலம், முகப்பேர் செல்லவேண்டும்.

புளுஸ்டார் சந்திப்பில் 5வது நிழற்சாலையிருந்து (ஜெஸ்சி மோசஸ் பள்ளி மார்க்கதிலிருந்து) இரண்டாவது நிழற்சாலைக்கு (அண்ணாநகர் ரவுண்டானா நோக்கி) இடதுபுறம் திரும்புவதை தவிர்த்து 5வது நிழற்சாலையில் நேராக சென்று 4வது நிழற்சாலை வழியே செல்ல வேண்டும்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். எனவே வாகனஓட்டிகளும், பொதுமக்களும் மற்றும் குடியிருப்புவாசிகளும் ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறைசார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது என சென்னை போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்