அட்டர் பிளாப் ஆன இந்தியன் 2…ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?
இந்தியன் 2 : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியான இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற காரணத்தால் விமர்சன ரீதியாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது என்றே சொல்லலாம். படம் வெளியாகி இன்னும் சில திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது.
இருப்பினும், முதல் பாகம் அளவிற்கு ஷங்கர் எடுக்கவில்லை என்று படம் பார்த்த பலரும் எதிர்மறையான விமர்சனங்களை கூறி வருவதால் படத்தினை பார்க்க மக்கள் குறைவாகவே திரையரங்குகளுக்கு சென்று வருகிறார்கள். இதன் காரணமாக படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என்று கூட கூறலாம்.
கிட்டதட்ட 250 கோடி பட்ஜெட் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை உலகம் முழுவதும் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் தோல்வி அடைந்த நிலையில், திரையரங்குகளில் படம் பார்க்க தவறியவர்கள் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில், படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என்பதற்கான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைபடடம் சரியாக போகவில்லை என்றாலும் கூட ஓடிடியில் பிரமாண்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையையும், இந்தியன் 3 உரிமையையும் சேர்த்து ஒரு பாகத்திற்கு 100 கோடி கணக்கு போட்டு இரண்டு பாகத்தையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 200 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 படம் எடுக்கப்பட்டது 250 கோடி பட்ஜெட் ஏற்கனவே, உலகம் முழுவதும் படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது. 100 கோடி ஓடிடியில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. எனவே, படத்தினுடைய பட்ஜெட்டை படக்குழு இதன் மூலம் ஈட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.