சஞ்சு சாம்சன் வேண்டாம்…அவரை எடுங்க…கெளதம் கம்பீர் எடுத்த முடிவு?
INDvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி வரும் ஜூலை 27-ஆம் தேதி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்திய அணி : சூர்யகுமார் யாதவ் (C), ஹுப்மன் கில் (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் , கலீல் அகமது, முகமது. சிராஜ்.
இதில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் லெவனில் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. குறிப்பாக அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா? அல்லது ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்திருக்கிறது. இதில், ரிஷப் பந்த்தை தான் விளையாட வைக்க அணியின் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் முடிவெடுத்துள்ளாராம்.
பண்ட் மற்றும் சாம்சன் இருவரும் ஃபினிஷர் அல்ல, அதாவது அவர்களில் ஒருவர் முக்கியமான மூன்றாம் இடத்தில் பேட் செய்ய வாய்ப்புள்ளது. எனவே, அந்த இடத்திற்கு யார் சரியாக இருப்பார் என்று கெளதம் கம்பீர் யோசித்து ரிஷப் பந்த் இடது கை ஆட்டக்காரர் அந்த இடத்தில் அவர் சரியாக விளையாடுவார் என அவரை விளையாட வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சஞ்சு சாம்சன் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் இடம்பெறாததே அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதில் டி20 போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு குறைவு அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விளையாட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள்
சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் (WK), சூர்யகுமார் யாதவ் (C), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், சிராஜ்