நாளை தொடங்கும் ஒலிம்பிக் திருவிழா …களைகட்டும் பாரிஸ் ! போட்டிகளை எங்கே பார்ப்பது?

Paris Olympic 2024

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளதால் பாரிஸ் மாகாணம் களைகட்டி வருகிறது.

உலகம் முழுவதும் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் விளையாட்டு போட்டி தான் ஒலிம்பிக் போட்டிகள், உலக நாடுகள் பங்கேற்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதால் உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.

இந்த மிகப்பெரிய ஒலிம்பிக் திருவிழாவானாது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆண்டு தொடங்கியது முதலே பாரிஸில் ஒலிம்பிக் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியது. இதற்காக கடந்த ஆண்டு முதல் ஒலிம்பிக் கிராமத்தை அமைக்கும் பணிகளில் பிரான்ஸ் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

நாளை தொடங்க உள்ள ஒலிம்பிக் திருவிழாவில், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு குவிந்து வருகின்றனர். இந்த 2024 -ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்க உள்ளன. அதில் ஆப்ரிக்காவில் இருந்து 54 நாடுகளும், ஐரோப்பாவில் இருந்து 48 நாடுகளும், அமெரிக்க கண்டத்தில் இருந்து 41 நாடுகளும், ஆசியாவில் இருந்து 44 நாடுகளும் பங்கேற்க உள்ளது. மேலும், மொத்தமாக 2,900 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

நீச்சல், ஓட்டப்பந்தயம், கூடைப்பந்து, பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம், மராத்தான், ஹாக்கி, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக், படகுப்போட்டி, பாய்மரப்படகுப் போட்டி, வாலிபால், பளுதூக்குதல், டேக்வோண்டோ, துப்பாக்கிச்சுடுதல், ரக்பி, நீளம் தாண்டுதல், தடை ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என பல போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும், நடப்பு ஒலிம்பிக் தொடரில் ப்ரேக்கிங் டான்ஸ் முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.  வழக்கம் போல இந்த முறையும் பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கு அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா சார்பில் மொத்தம் 116 வீரர்கள், வீராங்கனைகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர்.

உலகின் பல நாட்டு வீரர்,வீராங்கனைகளும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க இருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் போட்டியை காண்பதற்காக வர உள்ளனர். இதனால், பாரீஸ் நகரம் முழுவதும் பல மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க் சேனலில் காணலாம் அல்லது ஜியோ சினிமா செயலியில் இலவசமாகவும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்