ரீசார்ஜ் விலை எகிறி போச்சு…BSNL க்கு எப்படி மாறுவது தெரியலையா? இதோ உங்களுக்காக!!

BSNL

BSNL : இந்தியாவில் பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சிம் கார்டுகளான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் ரீசார்ஜ் திட்டத்தின் விலை உயர்த்தப்பட்ட காரணமாக,  அதனை பயன்படுத்தி வந்த  வாடிக்கையாளர்கள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  பிஎஸ்என்எல் சிம்முக்கு மாறி வருகிறார்கள்.

பலர் புதிதாக பிஎஸ்என்எல் சிம்கள் வாங்கி கொண்டு இருக்கும் நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்கள் பலர் தாங்கள் பயன்படுத்தி வரும் அதே எண்ணுக்கு பிஎஸ்என்எல்-க்கு மாறி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய சிம்கார்டுகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் எப்படி பிஎஸ்என்எல்-க்கு தங்களுடைய நம்பரை மாற்றவேண்டும் என்று  தெரியாமல் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்காக எப்படி சுலபமாக பிஎஸ்என்எல்க்கு மாறலாம் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மற்ற சிம்களில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறவேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களுடைய போனில் மெசேஜ் செயலிக்குள் போகவேண்டும். பிறகு நீங்கள் மாறப்போகும் அந்த எண்ணில் இருந்து 1900 என்ற எண்ணுக்கு PORT என்று எழுதிவிட்டு ஒரே ஒரு ஸ்பேஸ் மட்டும் விட்டு உங்களுடைய போன் எண்ணை போட்டு கொண்டு மெசேஜ் செய்யுங்கள். உதாரணமாக (PORT 0123456789)

நீங்கள் மெசேஜ் செய்த அடுத்த சில நொடிகளில் 911901 என்ற எண்ணில் இருந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். அதில் The UPC for your mobile no (your phone numper) is AT****, valid upto Do not share this UPC with anyone except the recipient operator personnel” என்று வரும். இது கிட்டதட்ட 15 நாட்கள் வரை வேலிடிட்டி இருக்கும். எனவே, இந்த மெசேஜ் வந்த பிறகு நீங்கள் உங்களுடைய ஆதார் கார்டை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் பிஎஸ்என்எல் (BSNL) அலுவலகம் அல்லது போன் தொடர்பான கடைகளுக்கு சென்று முன்னதாக வந்திருக்கும் அந்த மெசேஜை காமித்தால் போதும் சுலபமாகவே நீங்கள் பிஎஸ்என்எல்க்கு மாறிக்கொள்ளலாம்.

மேலும், நீங்கள் உங்களுடைய எண்ணை மாற்றுவதற்காக 1900 எண்ணுக்கு மெசேஜ் செய்த சில நிமிடங்களில் நீங்கள் எதற்காக சிம்மை மாற்றுகிறீர்கள் என்று தற்போது நீங்கள் பயன்படுத்தி வரும் சிம்கார்ட் நிறுவனம் உங்களை போனில் அழைத்து விவரத்தை கேட்டால் அதற்கும் நீங்கள் ஏன் என்று பதில் அளித்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIve 2 - BJP - TVK
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat