கம்பீர் குறுக்கு வழியில் தான் கோச் ஆனார் ..! பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் குற்றச்சாட்டு ..!

Gautam Gambir - Tanveer Ahamed

தன்வீர் அகமது : இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை பற்றி அவரது எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்து குற்றம் சாட்டியுள்ளார் தன்வீர் அகமது.

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்த போது ராகுல் டிராவிட் அவருக்கு அடுத்த பயிற்சியாளராக இருந்து அப்போது விளையாடிய இளம் இந்திய அணியுடன் இலங்கை ,ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார். அதன்பிறகு, ரவி சாஸ்திரியின் பயிற்சி பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டார்.

அதன்பிறகு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்ட பொழுது இளம் இந்திய அணியை சிறிய நாடுகளுக்கு எதிராக விளையாடும் பொழுது விவிஎஸ் லக்ஷ்மணன் பயிற்சியாளராக சென்று வழி நடத்தி வந்தார். அதன்பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மணன் தான் இருப்பார் என இந்திய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்ட கவுதம் கம்பீர் இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையையும் வென்றார்.

இதனால், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான தன்வீர் அகமது அவரது எக்ஸ் தளத்தில் கம்பீருக்கு அளித்த பயிற்சியாளர் பதிவியை விமர்சித்து குற்றம் சாட்டியிருந்தார். அவர் அந்த பதிவில், “இந்தியா B அணியுடன் நீண்ட காலம் பயிற்சியாளராக இருந்த காரணத்தினால் விவிஎஸ் லக்ஷ்மணன் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்திருக்க வேண்டும்.

இந்த இந்திய தலைமை பயிற்சியாளர் பதவி மெரிட்டின் அடிப்படையில் நிரப்படவில்லை. கவுதம் கம்பீர் தகுதியின் அடிப்படையில் வராமல் குறுக்கு வழியில் தான் கோச் ஆகியிருக்கிறார்”, என்று தன்வீர் அகமது பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவு இந்திய ரசிகர்களிடையே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்