8-ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா? இந்தியன் வங்கியில் மாதம் ரூ.20,000 சம்பளத்துடன் அசத்தல் வேலை!!
Indian Bank Recruitment 2024 : இந்தியன் வங்கி, சிவகாசி தமிழ்நாடு விருதுநகரில் பல்வேறு நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்து அதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே, இந்த பணியில் வேளைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் விருப்பமும் இருந்தது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் |
காலியிடங்கள் எண்ணிக்கை
|
நகை மதிப்பீட்டாளர் | பல்வேறு |
தேவையான கல்விதகுதி
- நகை மதிப்பீட்டாளர் பணியில் வேளைக்கு சேர நீங்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?
- இந்த பணியில் வேலைக்கு சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூ.20,000 லிருந்து ரூ.40,000 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு
- இந்த பணியில் வேலைக்கு சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 25 முதல் 50 வயது இருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
- இந்த வேலையில் சேர உங்களுக்கு விருப்பமும், தேவையான தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
- போட்டோ, கல்விச் சான்றிதழ், டி.சி., பயிற்சி சான்றிதழ் நகல் அனுபவச் சான்றிதழ், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, காவல்துறையிலிருந்து NOC சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை தயார் செய்யவேண்டும்.
- விண்ணப்பங்களை சிவகாசி இந்தியன் வங்கி டவுண் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பம் சமர்ப்பிக்க பட்ட பிறகு அதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பெயர் அறிவிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
- இந்த பணியில் சேர விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படுபவர்கள் நேரில் அழைக்கப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பு :
விண்ணப்பங்கள், தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் மட்டுமே பரிசீலிக்கப்படும். எவ்வித பரிந்துரைகளும் ஏற்கப்பட மாட்டாது. மீறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். ஊதியம் கமிஷன் அடிப்படையில் மட்டுமே பணி நிரந்தரம் கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்தத் தேர்வு செயல்முறையை எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் நிறுத்தி வைக்க வங்கிக்கு முழு அதிகாரம் உண்டு.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 12-07-2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 15-08-2024 |
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
விண்ணப்ப படிவம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |