நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்- ராகுல் காந்தி விமர்சனம்!

Nirmala Sitharamaand Rahul Gandhin

மத்திய பட்ஜெட் 2024 : மத்திய அரசின் கூட்டாளிகளை சமாதானப்படுத்தவே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2024-ஐதாக்கல் செய்தார். அதில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இளைஞர்களுக்கான திட்டத்தில், 1 லட்சம் ஊதியம் வரையில் புதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய சார்பாக அதிகபட்சம் 15 ஆயிரம் வரையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும்,  தொழில் நிறுவனங்களில் அப்ரன்டீஸ் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமும் இன்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம், அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், பீட்டர் அல்போன்ஸ்  உள்ளிட்ட பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தவும், தங்களின் நாற்காலியை காப்பாற்றும் வகையில், இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை காப்பி பேஸ்ட் செய்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்