வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!
மத்திய பட்ஜெட் 2024 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வந்த நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு வந்தார். கடந்த நிதியாண்டில் ரூ.1.26 கோடி வேளாண் துறைக்கு அறிவித்த நிலையில், நடப்பு நிதியாண்டில் முக்கிய அறிவிப்பாக வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.
இந்த நிதியாண்டில் 2024-25 பட்ஜெட்டில் 0.27 % சதவிகிதம் அதிகரித்து ரூ.1.52 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை விவசாயம் செய்வதற்கு ரூ.1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. அதே போல வேளாண் துறையில் டிஜிட்டல் மயமாகபுகுத்தப்படும் எனவும் டிஜிட்டல் முறையில் வேளான் பொருட்கள் தொடர்பான சர்வே எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல பருவநிலை மாற்றத்தால் எந்த பாதிக்கப்படாத வகையில் 152 வகை பயிர்களை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் எனவும் பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் இன்னும் 5 ஆண்டுக்கு நீடிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி ‘கிசான் கிரெடிட் கார்டுகள்’ வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு 5 மாநிலங்களில் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.