இளைஞர்களுக்காக… மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் இதோ…
மத்திய பட்ஜெட் 2024 : இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அப்போது, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏழைகள்,பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை என நிர்மலா சீதா ராமன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு பயனுள்ள வைகையில் அறிவிக்கப்பட்டதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கல்வி கடன்
- உள்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பயில 10 லட்சம் ரூபாய் வரையில் கல்வி கடன் வழங்கப்படும்.
மாத ஊதியம்
- புதியதாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஒருமாத ஊதியம் வழங்கப்படும். அதாவது மாத ஊதியம் ரூ.1 லட்ச்த்துக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் மூன்று தவணைகளாகச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் 2.1 கோடி இளைஞர்கள் பலன் அடைவார்கள்.
இளைஞர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி
- நாட்டில் உள்ள 500 சிறந்த நிறுவனங்களில் ஆண்டுக்கு 20 லட்சம் இளைஞர்கள் வீதம், 4 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
- பயிற்சி காலத்தில் மாதத்திற்கு 5,000 ரூபாயும், ஒருமுறை ஊக்கத்தொகையாக 6,000 ரூபாயும் அளிக்கப்படும்.
- திறன் மேம்பாட்டு பயிற்சி திட்ட செலவில் 10 சதவீதத்தை பெருநிறுவனங்கள் தங்களின் கார்ப்பரேட் சமூக பங்களிப்பு ( CSR) திட்டத்தின்கீழ் வழங்கும்
- கோடி இளைஞர்களுக்கு புதிய இன்டர்ன்ஷிப் திட்டம் 1 கோடி இளைஞர்களுக்கு புதிய இன்டர்ன்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்புக்காக 5 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்காக ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.