பட்ஜெட் 2024 : கூட்டணி கட்சிகளுக்கு சலுகைகள்.? பீகார் ஆந்திராவுக்கு சிறப்பு திட்டங்கள்…!
மத்திய பட்ஜெட் 2024 : மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக இந்த முறை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து என்டிஏ தலைமையிலான கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.
இதன் காரணமாக தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திரா மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் பீகார் மாநிலங்களுக்கு இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது அதனை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
அதில், முக்கியமான அறிவிப்பாக ஆந்திராவின் தலைநகராக உருவாகும் அமராவதி க்கு மேம்பாட்டு நிதியாக 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்து இருக்கிறார். பீகாரில் விமான நிலையம், மருத்துவக் கல்லூரிகள், விரைவுச் சாலைகள் அமைக்க 26,000 கோடி பட்ஜெட்டில் நிதியுதவி வழங்கப்படும்.
பீகார் மாநிலத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக 11,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பீகாரின் கயா முதல் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் வரை புதிய பொருளாதார வளர்ச்சி மையம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேசம் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் குடிநீர், மின்சாரம், ரயில், சாலை உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ. 15,000 கோடி ஒதுக்கப்படுவதாகவும், ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
பீகாரில் நாளாந்த பல்கலைக்கழகம் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார்.