மும்பை இந்தியன்ஸ்க்கு டாட்டா காட்டும் ரோஹித்-சூர்யாகுமார்? வெளியான அதிர்ச்சி தகவல் ..!

Rohit Sharma - Suryakumar Yadav

ஐபிஎல் : வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான மும்பை இந்தியன்ஸ் குறித்த ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் அடுத்த கட்டமாக, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற இருக்கும் மெகா ஏலமானது நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடேயே பல எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. மேலும், பல ஸ்வாரஸ்யமான தகவல்களும், பல அதிர்ச்சி தரும் தகவல்களும் நாளுக்கு நாள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. தற்போது அது போன்ற ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அது என்னவென்றால், ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக வளம் வரும் அணி தான் மும்பை இந்தியன்ஸ், அந்த அணியில் நட்சத்திர வீரர்களாக இருக்கும் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற உள்ளதாக டைனிக் ஜாக்ரன் எனும் பத்திரிகை மூலம் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இது உண்மையாக இருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் இடியாக அமைந்து விடும்.

ஏற்கனவ, குஜராத் அணியின் கேப்டனாக செயலாற்றி வந்த ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பி கேப்டனாகவும் செயலாற்றினார். இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களையே கோபம் அடைய செய்தது. மேலும், நடைபெற்ற அந்த தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகள் விளையாடி 4 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று தொடரில் மோசமான நிலையை சந்தித்தது.

இந்நிலையில், இந்த இரண்டு வீரர்களும் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டுவிட்டு வேறு அணிக்கு சென்றால் அது மும்பை இந்தியன்ஸ் பெரிய ஒரு இழப்பாக மாறிவிடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே, டெல்லி அணியின் கேப்டனாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் டெல்லி அணியை விட்டு வெளியேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடம் மாறவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்