போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க… அமைச்சரின் அசத்தல் அட்வைஸ்.!

TRB Raja Twet about Google Map Instruction

சென்னை: போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க என கூகுள் மேப்பில் குறிப்பிட்டுள்ளதை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

பிரபல ஆன்லைன் இயங்குதளமான கூகுள் நிறுவனத்தின் முக்கியமான ஒரு பிரிவு கூகுள் மேப். இந்த கூகுள் மேப்பில் அவ்வப்போது புதுபுது அப்டேட்டை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. முதலில் நாம் எங்கு போக வேண்டுமோ அதற்கான பாதையை மட்டுமே காண்பித்தது.

தற்போது எந்த பகுதியில் டிராபிக் அதிகமாக இருக்கும், ஹோட்டல் , பெட்ரோல் பங்க் முதல் அவசர நிலைக்கு அருகில் உள்ள கழிவறை வரையில் காட்டப்படுகிறது. மேலும் சாட்டிலைட் மேப் உதவியுடன் இந்த இடம் இப்படி தான் இருக்கும் என்றும் கூகுள் மேப் காட்டுகிறது.

தற்போது, அடுத்தகட்டமாக், போலீஸ் நிற்கிறார்கள் ஹெல்மெட் போட்டுக்கோங்க என இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சிக்னல் வரை தரும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இதனை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நகைச்சுவையாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், கூகுள் மேப் போல தமிழக போக்குவரத்துதுறை, சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களிலும் இதே போல ஒரு விளம்பரத்தை செய்து மக்கள் மத்தியில் ஹெல்மேட் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டள்ளார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்