இல்லத்தரசிகளே.. உங்கள் சமையல் டேஸ்ட்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

cooking tips

Cooking tips-நீங்கள் செய்யும் சமையல் டேஸ்ட்டா வர இந்த சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்.

நம்மில் பலருக்கும் சமையல் தெரியும் ,ஆனால் ஒரு சிலரின் சமையல் மட்டும் சுவையாக இருக்கும் .இதற்கு காரணம் அவர்களின் கை பக்குவம் தான் .செய்யும் சமையலில் சிறு சிறு நுணுக்கங்கள் அவர்களுக்கு தெரியும் ,அந்த நுணுக்கங்களை நாம் இந்த பதிவிலும் தெரிந்து கொள்ளலாம் .

சமையல் குறிப்புகள் ;

  • தோசை பொன்னிறமாக வர மாவு அரைக்கும் போது கால் கப் கடலை பருப்பு மற்றும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து கொள்ளவும் .
  • உளுந்த வடை வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே சாப்பிட்டாகவும் இருக்க உளுந்து ஊற வைக்கும்போது நான்கு ஸ்பூன் பச்சரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைக்க வேண்டும்.
  • ரசம் வாசனையாகவும் சுவையாகவும் இருக்க ரசம் செய்யும் போது உப்பு சேர்க்காமல் செய்து முடித்த பிறகு மற்றொரு பாத்திரத்தில் உப்பும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து பிறகு அதிலேயே ரசத்தை ஊற்றினால் நல்ல மணமாக இருக்கும்.
  • சாம்பார் சுவையாக இருக்க பருப்பு வேகும் போது சிறிதளவு பெருங்காயம் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து வேக வைக்கவும்.
  • அவியல் சுவையாக இருக்க தேங்காய் அரைத்து ஊற்றுவதற்கு முன்பு அந்தத் தேங்காய் துருவலை லேசாக வறுத்து பிறகு அரைத்து சேர்த்தால் சுவை கூடும்.
  • இட்லி சாப்டாகவும் வெள்ளையாகவும் வர அரிசி ஊற வைக்கும் போது ஜவ்வரிசி கால் கப் சேர்த்து ஊற வைத்து அரைக்கவும்.
  • சாம்பார் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்க பருப்பு வேகும் போது இரண்டு கிராம்பை சேர்த்து வேகவைத்து கொள்ளவும். இவ்வாறு செய்யும்போது மாலை வரை கெடாமல் இருக்கும்.
  • சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால் கரண்டியை அடுப்பில் சூடு செய்து சாம்பாரில் வைத்து விட வேண்டும்.
  • புளியில் பூச்சிகள் வராமல் இருக்க வாங்கி வைக்கும் போது தேங்காய் எண்ணெய் மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து வைக்கவும்.
  • இட்லி மாவு புளிக்காமல் இருக்க அரிசி அரைக்கும் போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து அரைக்கவும். தோசை மாவில் அதிக புளிப்பு வந்துவிட்டால் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிறகு பயன்படுத்தவும்.
  • பிரிட்ஜ் இல்லாதவர்கள் காய்கறிகள் பிரஷ்ஷாக வைத்து கொள்ள  தண்ணீரில் எலுமிச்சை கலந்து காய்களில் தெளித்து வைத்து விட்டால் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • நீண்ட நாட்களுக்கு ரவையில் புழு வராமல் இருக்க சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

ஆகவே இந்த டிப்ஸ்களை தெரிந்து வைத்துக் கொண்டு உங்கள் சமையலை அசத்துங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்