கேரளாவில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு.! நோயின் அறிகுறிகள் என்ன?
நிபா வைரஸ் : கேரள மாநிலத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஜிகா வைரஸ் மற்றும் குஜராத்தில் சண்டிபுரா வைரஸ் என மக்களை அச்சமடைய செய்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் தாக்கிய 14 நாட்களில் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். முதலில், காய்ச்சல் அல்லது தலைவலி மற்றும் பின்னர் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று பரவியுள்ளது . மேற்கு வங்கத்தில் 2001 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் இரண்டு முறை நிபா வைரஸ் தொற்று பரவியது. இதற்குப் பிறகு, மே 2018-ல், கேரளாவில் முதல் முறையாக நிபா தொற்று பரவியது.
நிபா வைரஸ் என்றால் என்ன?
நிபா வைரஸ் (NiV) என்பது ஜூனோடிக் வைரஸ் ஆகும், அதாவது இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.1998-1999 இல் மலேசியாவில் பன்றி வளர்ப்பவர்கள் மற்றும் பன்றிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மத்தியில் இது முதன்முதலில் கண்டறியப்பட்டது. மலேசியாவில் முதன்முதலில் பரவிய கிராமத்தின் நினைவாக இந்த வைரஸுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
நிபா வைரஸின் அறிகுறிகள் :
- அதிக காய்ச்சல்
- தலைவலி
- இருமல்
- மூச்சு விடுவதில் சிரமம்
- குழம்ப வேண்டும்
- பேச்சின் தெளிவின்மை.
தடுப்பதற்கான வழிமுறை :
- நோய்வாய்ப்பட்ட பன்றிகள் மற்றும் வௌவால்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம்.
- கைகளை அடிக்கடி சோப்பினால் சுத்தம் செய்யவும்.
- அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டாம்.
- பாதிக்கப்பட்ட இரத்தத்திலிருந்து ஒருவர் விலகி இருக்க வேண்டும்.