அரசியலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு.! புள்ளி விவரத்தோடு மம்தா பெருமிதம்.!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் தியாகிகள் பேரணி இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய மம்தா பேனர்ஜி, “திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிகளில் 38 சதவீதம் பேர் பெண்கள் உள்ளனர். தேர்தலுக்கு முன், அரசியலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர். ஆனால், அதனை யாராலும் செய்ய முடியவில்லை.
தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்த ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான். இது 38 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை தற்போது உறுதி செய்துள்ளது என பெருமையாக குறிப்பிடார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றது. அதில் 11 பேர் பெண்கள் ஆவார். 33 சதவீத இடஒதுக்கீடின் படி 12 பெண்கள் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக களமிறக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.