சமூகப்பணியில் விருப்பம் உள்ளவர்களே ..! ரூ.18,000 சம்பளத்தில் அரசு சமூகநலத்துறையில் அட்டகாசமான வேலை ..!
அரசு சமூகநலத்துறை ஆட்சேர்ப்பு : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பாக தமிழ்நாடு அரசு சமூகநலத்துறையில் இந்த ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவிக்கப்பட்ட தமிழக அரசு பணி தொடர்பான அனைத்து விவரங்களை பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி | 15-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31-07-2024 |
காலியிட விவரங்கள் :
பதவி | காலியிடம் |
வழக்கு பணியாளர் | 2 |
கல்வி தகுதி :
- மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அல்லது வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவுதலில் 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
- இந்த வேலைக்காக பணியமர்த்தப்படும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு :
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மேலும், அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியர்த்தப்படும் இடம் :
- மதுரை – தமிழ்நாடு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மூன்றாவது தளம், கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை – 625020, என்ற முகவரிக்கு நீங்கள் உங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
- இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதியும் விருப்பமும் உடயர்வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
- இந்த பணிக்காக விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://madurai.nic.in/notice_category/recruitment/ பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அல்லது இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த படிவத்தை நன்கு சரிபார்த்து, சரியாக பூரித்து செய்ய வேண்டும்.
- அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- குறிப்பு : – விண்ணப்பக்கட்டணம் கிடையாது.