வார இறுதியில் மீண்டும் ரூ.55,000-க்கு கீழ் சென்ற தங்கம் விலை.!
சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை, படிப்படியாக குறைந்து வருகிறது. வாரத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.55,000ஐ தாண்டிய நிலையில், வார இறுதியில் ரூ.55,000-க்கு கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (20-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.54,680க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,835க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து, ஒரு கிராம் ரூ.97.65க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (19-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.55,000க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,875க்கும் விற்பனை ஆனது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.97.75க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.