அன்புமணி ராமதாஸ் உட்பட பாமகவினர் மீது வழக்குப்பதிவு..!
சென்னை : எழும்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டண விலை உயர்த்தப்பட்ட நிலையில், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் பா.ம.க. ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற கூறி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, அரசு வழங்கிய விலையில்லா டி.வி., மின்விசிறியை உடைத்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
போராட்டத்தின் போது மாவட்ட செயலாளர் பிரதீப், இலவச தொலைக்காட்சி, மின்விசிறியை தூக்கிப்போட்டு உடைத்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்ற பா.ம.க.வினர் பலரும் மின்விசிறி, தொலைக்காட்சியை உடைத்த காரணத்தால் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட போராட்டத்தில் கலந்துகொண்டோர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.