டி-சீரிஸ் தயாரிப்பாளரின் 21 வயது மகள் காலமானார்.!
டி-சீரிஸ் : பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான டி-சீரிஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார் தனது 21வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
புற்றுநோயினால் நீண்டகாலமாக போராடி வந்த அவர், ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் திஷா காலமானதை குமார் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் உறுதிப்படுத்தினார் .
இது தொடர்பாக டி-சீரிஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “கிரிஷன் குமாரின் மகள் திஷா குமார், நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலமானார். இது குடும்பத்திற்கு கடினமான நேரம், குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
திஷா சில பொதுவெளியில் தோன்றினாலும், சில சமயங்களில் டி-சீரிஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் திஷா தனது தந்தை கிரிஷனுடன் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் அன்று ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ படத்தின் பிரீமியரில் அவர் சமீபத்தில் பொதுவில் தோன்றினார்.