இங்கிலாந்து அணி 423 ரன்களுடன் டிக்ளேர் …!இந்திய அணி வெற்றிபெற 464 ரன்கள் இலக்கு …!

Default Image

இங்கிலாந்து அணி 423 ரன்களுடன் டிக்ளேர் செய்துள்ளது.

கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் எடுத்தது. தற்போது, போட்டியின் நான்காவது நாளான இன்று 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்களுடன் 463 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக  தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அலஸ்டர் குக் 147,ரூட் 125 ரன்களும் அடித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா.விகாரி தலா மூன்று விக்கெட்டுகளும்,சமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 464 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்