ஸ்விட்சர்லாந்தில் தற்கொலை இயந்திரம் கண்டுபிடிப்பு.. விரைவில் அறிமுகம்.!

Sarco suicide capsule

சுவிட்சர்லாந்து : உலகின் முதல் முதலில் ‘சர்கோ காப்ஸ்யூல்’ என்ற ஒரு நிமிட வலியில்லா மரண இயந்திரம் விரைவில் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அட ஆமாங்க.. சுவிட்சர்லாந்து அரசு ‘தற்கொலை இயந்திரத்தை’ பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி ஒருவர் தனது உயிரை 5 நிமிடத்தில் இழக்க முடியும்.

சர்கோ என்ற அமைப்பு இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலேயே இந்த தற்கொலை இயந்திரத்தை அந்த அமைப்பு கண்டுபிடித்துள்ளது. ஆனால் இப்போது இந்த இயந்திரம் சமீபத்திய அப்டேட் உடன் பயன்படுத்த தயாராக இருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.

இந்த இயந்திரத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்பவர்கள் வலியின்றி இறந்துவிடுகிறார்கள். இந்த இயந்திரம் தற்கொலை பட்டனை அழுத்தியவுடன் ஆக்ஸிஜனுக்கு பதிலாக நைட்ரஜனை வெளியிடுகிறது. இதன் காரணமாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஒரு நிமிடம் முதல் ஐந்து நிமிடத்திலேயே ஒருவர் இறந்துவிடுகிறார் என்று கூறப்படுகிறது.

இதற்காக, 20 டாலர் (ரூ.1,600) கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தற்கொலை பாட் சுவிட்சர்லாந்தின் “தி லாஸ்ட் ரிசார்ட்” என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் தற்கொலைக்கான சட்ட அங்கீகாரம் இல்லாத காரணமாக, இந்த அமைப்பின் சேவைக்கு இதுவரை எந்தவிதமான சட்டச் சிக்கலும் ஏற்படவில்லை.

சுவிட்சர்லாந்தில், ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கான சரியான காரணத்தை தெரிவித்தாலோ அல்லது அவரது மரணத்திற்கு காரணமான காரணியை நிரூபித்தாலோ அவர் தற்கொலை செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறார். அவர் தற்கொலை செய்து கொள்ள சட்டம் அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய தற்கொலை பாட் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தி லாஸ்ட் ரிசார்ட்டின் தலைமை செயல் அதிகாரி ஃப்ளோரியன் வில்லெட், “தற்கொலை செய்ய மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், எங்கள் சர்கோ இயந்திரத்தின் பயன்பாட்டிற்காக காத்திருக்கிறது. இங்கே மரணம் மிக விரைவாக நிகழ்கிறது. உங்கள் மரணம் வலியற்றதாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும். நிம்மதியான உறக்கத்தில் விழும் வரை ஆக்ஸிஜன் இல்லாமல் (இறப்பதற்கு) காற்றை சுவாசிக்க இது மிகவும் அழகான வழி” என்று கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்