பெற்ற மகனை அடித்து, கடித்து துன்புறுத்திய கொடூர தாய்! நெஞ்சை உலுக்கும் வீடியோ ..!

Mother Brutally Beats

மும்பை : ஹரித்வாரின் ரூர்கீயில் தாய் ஒருவர் தன்னுடைய 8 வயது மகனை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் தாய் ஒருவர் எதோ  ஒரு கோபத்தில் தன்னுடைய மகனை பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் அவனுடைய மீது அமர்ந்து கொண்டு அவனை எழும்ப விடாமல் கையை வைத்து குத்துகிறார்.

குழந்தை அழுது, தாயிடம் தன்னைக் விடுங்கள் அம்மா எனக்கு வலிக்கிறது என்று  கெஞ்சுகிறான்; ஆனால், அந்த பெண் அவனது கெஞ்சலை பொருட்படுத்தாமல் விடாமல் தாக்கி கொண்டே இருந்தார். “மம்மி, முதலில் தண்ணீர் கொடு எனக்கு”  என்று கெஞ்சிக்கொண்டிருக்க, அந்த பெண் அவனது முகத்தில் பல முறை பளார் பளார் என்று அடித்தார்.

இந்த சம்பவத்தை மற்றோரு சிறுவனும் அங்கிருந்து பார்த்து பயந்தான். மற்றோருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் மகனை நெரிக்கும்போது, குழந்தை மூச்சுத் திணறுகிறது. வீடியோ பதிவு செய்யும் நபர் அவனை விடு  அவன் இறந்து விடப்போகிறான் என்று  கத்திய போது அந்த கொடூர தாய் குழந்தையை விட்டார். பிறகு பயத்தில் தட்டிவிட்டு ஓடிய அந்த சிறுவனை காலால் அந்த தாய் எட்டியும் உதைத்தார்.

தாயின் மிருகத்தனமான நடத்தை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. சிலர் அந்தப் பெண்ணை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூற, மற்றவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். இந்த சம்பவத்தில் சிறுவன் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)