ஐடி நிறுவனங்கள்.., கர்நாடகாவின் திடீர் முடிவு.! சைலண்டாக காய் நகர்த்தும் ஆந்திரா.!

Karnatka CM Siddaramaiah - Andhra minister Nara Lokesh

பெங்களூரு: கர்நாடகாவில் அண்மையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், தனியார் நிறுவனங்களில் சி,டி கிரேடு பணிகளில் 100 சதவீதம் கன்னடர்களை பணியமர்த்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அந்த தீர்மானத்தில், நிர்வாக பணிகளில் 50 சதவீதம் கன்னடர்கள் பணியமர்த்தப்பட வேண்டும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 75 சதவீதம் பணியமர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளுக்கு தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, ஐடி நிறுவனங்களின் சங்கமான NASSCOM கடும் அதிருப்தியை பதிவு செய்து இருந்தது.

தனியார் நிறுவனங்களின் அதிருப்திகள் அதிகமானதை அடுத்து நேற்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், தற்போது வரை இந்த இடஒதுக்கீடு மசோதா ஆரம்பக் கட்டத்தில்தான் இருப்பதாகவும், மேலும் மசோதா மீதான இறுதி முடிவு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஐடி நிறுவனங்களின் சங்கம் (NASSCOM) கர்நாடகாவில் (பெங்களூரு) இருந்த்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு தங்கள் வணிகங்களை இடமாற்றம் செய்யுமாறு ஆந்திர மாநில ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ் வலியுறுத்தினார்.

இது குறித்து NASSCOM அதிருப்திக்கு பதில் அளிக்கும் விதமாக நாரா லோகேஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், உங்கள் ஏமாற்றத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். உங்கள் வணிகங்களை எங்கள் IT சேவைகளை விசாகபட்டினத்திலுள்ள தரவு மையக் கிளஸ்டருக்கு விரிவாக்கம் அல்லது இடமாற்றம் செய்ய உங்களை வரவேற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாங்கள் உங்களுக்கு சிறந்த தொழில்நுட்ப வசதிகள், தடையில்லா மின்சாரம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உங்கள் IT நிறுவனத்திற்கு மிகவும் பொருத்தமான திறமையான பணியாட்களை அரசாங்கத்தின் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வழங்குவோம். என்றும், ஆந்திரப் பிரதேசம் உங்களை (NASSCOM) வரவேற்கத் தயாராக உள்ளது. தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் என ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்