அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா – வெள்ளை மாளிகை அறிக்கை.!
அமெரிக்கா : அதிபர் ஜோ பைடன் நேற்று லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சுவாச பிரச்னை, சளித்தொல்லையால் அவர் சிரமப்படுவதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு, அதிபருக்கான வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் கூறியுள்ளது.
President Biden is vaccinated, boosted, and he is experiencing mild symptoms following a positive COVID-19 test.
He will be returning to Delaware where he will self-isolate and will continue to carry out all of his duties fully during that time.
A note from @POTUS‘ Doctor:…
— The White House (@WhiteHouse) July 17, 2024
அதிபர் தேர்தலில் பைடன் செயல்பாடுகள் குறித்து சொந்தக்கட்சியினரே விமர்சனம் செய்யும் நிலையில், தற்போது கொரோனாவும் அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன், இருப்பது உறுதியானது, தான் நலமாக இருப்பதாகவும், அமெரிக்க மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
I tested positive for COVID-19 this afternoon, but I am feeling good and thank everyone for the well wishes.
I will be isolating as I recover, and during this time I will continue to work to get the job done for the American people.
— President Biden (@POTUS) July 17, 2024
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார். குடியரசு கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.