கொசு உங்களை மட்டும் கடிக்குதா..? அப்போ இதுதான் காரணமாம் ..!
Mosquito-கொசுக்கள் ஏன் குறிப்பிட்ட நபர்களை மட்டும் தாக்குகிறது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
மழைக்காலங்கள் துவங்கிவிட்ட நிலையில் கொசுக்கள் தொல்லை சற்று அதிகமாக இருக்கும் .இதனால் பல நோய்களும் காய்ச்சலும் பரவும் .சில சமயங்களில் இந்த கொசுக்கள் உயிரை கூட பறித்து விடுகிறது கிருமிகளையும் பரப்புகிறது.
அது மட்டுமல்லாமல் கால நிலை மாற்றங்கள் காரணமாகவும் கொசுக்கள் அதிகமாக காணப்படும். ஒரு சிலருக்கு கொசுக்கள் ஏன் நம்மளை மட்டும் கடிக்கிறது என்று யோசித்து இருப்பீர்கள். அதன் அடிப்படையில் கொசுக்கள் ஒருவரை தாக்குகிறது என்றால் அவர்களின் ரத்த வகை மற்றும் ஆடையின் நிறம் காரணமாகிறது என்று பலரும் கூறுகின்றனர் .
ஆனால் ஆய்வின் படி கொசுக்களால் வாசனை மற்றும் நிறம் ஆகியவற்றை உணர முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் ஒரு குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் கொசுக்கள் உங்களை மட்டும் தாக்கும். அது உங்களின் உடையின் நிறம் அல்லது உங்களின் வாசனையா கூட காரணமாக இருக்கலாம்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நிபுணர் நடத்திய ஆய்வின் படி சிவப்பு மற்றும் கருப்பு நிறங்கள் கொசுக்களை அதிகம் ஈர்க்கும் என்றும், பச்சை மற்றும் வெள்ளை நிறங்களை கொசுக்கள் விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் உங்கள் மீது உள்ள வியர்வையில் இருந்து வெளியேறும் வாசனை கூட காரணமாகிறது. அதிலும் குறிப்பாக பெண் கொசுக்கள் வாசனையை வைத்து தான் ஒருவரை தாக்குகிறது என ஆய்வில் கூறப்படுகிறது. கொசுக்களுக்கும் கற்கும் திறன் உள்ளது இந்த ஆற்றலை பயன்படுத்தி தான் குறிப்பிட்ட ஒரு சிலரை தாக்குகிறது .
அது மட்டுமல்லாமல் சர்க்கரை வாசனைகளையும் ஈர்க்கும் என கூறப்படுகிறது அதிலும் பழங்களின் இனிப்பு சுவையும் வாசனையும் கொசுக்களால் ஈர்க்கப்படுகிறது.எனவே கொசுக்களை ஈர்ப்பது என்னவென்று அறிந்து அவற்றை விலக்கி வைத்தால் கொசுவிடம் கடி வாங்குவதை தடுக்கலாம்.