10-ம் வகுப்பு போதும் …அஞ்சல் துறையில் அட்டகாசமான வேலை ..!
சென்னை : இந்திய தபால் அலுவலகம், சென்னையில் பல்வேறு முகவர்கள் (Agents) பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த வேளையில் வேளைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலிடங்கள்
பதவியின் பெயர் |
காலியிடங்கள் எண்ணிக்கை
|
முகவர்கள் (Agents) | பல்வேறு |
சம்பளம்
- முகவர்கள் (Agents) பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
- 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி |
வேலைவாய்ப்பில்லாத, சுயவேலை செய்கின்ற இளைஞர்கள் |
ஏதாவது ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் முகவர்கள் |
மகளிர் மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், |
சுயஉதவி குழுக்கள், ஊராட்சி தலைவர், |
ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் |
வயது வரம்பு
- இந்த பணியில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு
- இது அரசு வேலை அல்ல. முழுமையாக கமிஷன் அடிப்படையிலான பணியாகும். விண்ணப்பிக்கும் நபர் வேறு எந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருக்கக் கூடாது.
- தேர்வு செய்யப்படுவோர் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது குடியரசு தலைவரின் பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் ரூ.5,000 காப்பீட்டு தொகையாக செலுத்தவேண்டும். தற்காலிக உரி்ம கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும்.
எப்படி விண்ணப்பிக்கவேண்டும்?
இந்த வேளையில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், தாம்பரம் கோட்டம், சென்னை -600 045 என்ற முகவரியிலுள்ள தாம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முதலாவது தளத்தில் வரும் 30.07.2024 அன்று காலை 11 மணிக்கு அஞ்சலக ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறும்.
எனவே, விருப்பம் இருப்பவர்கள் அந்த இடத்திற்கு செல்லுங்கள். விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம், பான் அல்லது ஆதார் அட்டையின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை கொண்டு செல்லவேண்டும் என்பது முக்கியமானது.
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031802 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx |