சைலண்டாக சம்பவம் செய்ய வரும் கார்த்தியின் “மெய்யழகன்” திரைப்படம்!
மெய்யழகன் : இளைஞர்கள் மனதை பெரிதும் கவர்ந்து ’96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள “மெய்யழகன்” படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. 96 படம் எப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைவரது மனதை கவர்ந்ததோ, அதே போல் மெய்யழகன் திரைப்படமும் சம்பவம் செய்ய போகிறது.
A breezy journey filled with celebratory moments await 🎇
Can’t wait for you all to witness the rooted emotions on Sep 27#MeiyazhaganFromSep27#Meiyazhagan@Karthi_Offl @thearvindswami #PremKumar @Suriya_offl #Jyotika @rajsekarpandian #Rajkiran @SDsridivya #Jayaprakash… pic.twitter.com/VMwBzRDf8V— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 17, 2024
கார்த்தி -அரவிந்த் சாமி தவிர இந்த படத்தில், சரண் சக்தி மற்றும் ராஜ்கிரண் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் ஸ்ரீ திவ்யா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இதில், ஸ்வாதி கொண்டே, தேவதர்ஷினி, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் தங்களது 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் மற்றும் விருமன் ஆகிய படங்களைத் தொடர்ந்து, சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது கூட்டணி இதுவாகும்.
மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு கோவிந்த் வசந் இசையமைக்க, ஆர்.கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா மற்றும் பிரேம் குமார் ஆகியோரின் பிளாக்பஸ்டர் ஒலிப்பதிவு செய்துள்ளனர்.