ஹோட்டல் சுவையில் சிக்கன் ரைஸ் வீட்டிலேயே செய்யும் முறை..
Chicken fried rice-ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- பாசுமதி ரைஸ் =ஒரு கப்
- சிக்கன்= 250 கிராம்
- முட்டை= 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன்
- கேரட்= அரை கப்
- பீன்ஸ் =அரை கப்
- முட்டை கோஸ் =அரை கப்
- சோயா சாஸ்= இரண்டு ஸ்பூன்
- சில்லி சாஸ்= இரண்டு ஸ்பூன்
- மிளகுத்தூள்= இரண்டு ஸ்பூன்
- கான்பிளவர் மாவு= இரண்டு ஸ்பூன்
- மிளகாய்த்தூள் =இரண்டு ஸ்பூன்
- எண்ணெய் =தேவையான அளவு
செய்முறை;
அரிசியை வேகவைத்து ரெடியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். சிக்கனை மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சோளமாவு சேர்த்து 1 மணி நேரம் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் .
அதே எண்ணெயில் காய்கறிகளை சேர்த்து 50% வதக்கிக் கொள்ளவும்.இப்போது மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விட்டு சோயா சாஸ், சில்லி சாஸ் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். பிறகு சாதத்தையும் கலந்துவிட்டு அதனுடன் பொறித்து வைத்துள்ள சிக்கனையும் முட்டையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு மிளகுத் தூளையும் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான சுகாதாரமான சிக்கன் பிரைட் ரைஸ் ரெடி.