நீ கொடுக்க வேண்டாம்…அவரை கொடுக்க சொல்லு..மேடையில் நடிகரை அவமதித்த இசையமைப்பாளர்!

Ramesh Narayan

ரமேஷ் நாராயன் : மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும்  ரமேஷ் நாராயன், நடிகர் அசிஃப் அலியிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.  ‘மனோரதங்கள்’ என்ற மலையாள படத்தின்  டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது அசிஃப் அலி ரமேஷுக்கு விருது ஒன்றை வழங்க வேண்டியிருந்தது.  எனவே விருதை கொண்டு அசிஃப் அலி மகேஷ் நாராயணன் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்றார்.

ஆனால்,  ரமேஷ் அதை அசிஃபிடமிருந்து வாங்க மறுத்து, கையில் இருந்து பிடிங்கி இயக்குனர் ஜெயராஜிடம் இருந்து மட்டுமே வாங்க விரும்பினார். முதலில் விருது வழங்க இயக்குனர் ஜெயராஜ் தயக்கப்பட்டார், பின் மேடையில் நின்று விருதை ரமேஷுக்கு வழங்கினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது, இதனால் ரமேஷ் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் “இசையமைப்பாளர் ரமேஷ் நாராயன் தனது இயக்குனர் ஜெயராஜிடம் இருந்து விருதை பெற வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இது நல்ல விஷயம் தான். ஆனால், அதற்காக அசிஃபை அவமதிக்க வேண்டாம்,” என்று கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஒரு பக்கம் பேசும்பொருளான நிலையில், பதறிப்போன ரமேஷ் நாராயன் ” முதலில் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். என்னை மேடையில் அழைக்கவில்லை என்பதால் எனக்கு மிகவும் கோபம் வந்தது. அது ஒரு புறம் இருக்க எனக்கு அவர் தான் விருது வழங்குவார் என்ற விவரம் கூட தெரியாது. மற்றவர்களை போல அசிஃப் அலி எனக்கு பிடித்த நடிகர் தான். அவரை நேரில் அழைத்து கூட மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், இதற்கிடையில், ‘மனோரதங்கள்’ என்பது எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய புதிய மலையாள குறும்பட தொகுப்பு. இது மம்மூட்டி, மோகன்லால், பஹத் பாசில், கமல்ஹாசன், பார்வதி திருவோத்து, மதூ போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த தொகுப்பு ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்