இந்த செருப்போட விலை ரூ.1 லட்சம் ..! சவுதியில் நடந்த விசித்திர சம்பவம் ..!

Hawai Chappals

ஹவாய் செப்பல் : பொதுவாகவே நாம் கழிவறைக்கு செல்லும்போதும், அல்லது வெளியே எங்கயாவது செல்லும்போதும் மேலே வெள்ளை நிறம், கீழே ப்ளூ நிறம் கொண்ட ஹவாய் செப்பல் எனப்படும் செப்பலை  பயன்படுத்துவோம். இந்த செருப்பு இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால், சவூதி அரேபியாவில் ஹவாய் செருப்புகள் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமான விலையில் விற்கப்படும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது . உங்கள் குளியலறையில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய செருப்புகள் அங்கு அவ்வளவு பெரிய விலையில் விற்கப்படுவது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதா? அதைப்போல தான் நெட்டிசன்கள் பலருக்கும் இருக்கிறது.

இது தொடர்பாக வெளியாகி வைரலாகி வரும் வீடியோவில் ” கையுறை அணிந்த கடையின் ஊழியர் ஒருவர் ஒரு ஜோடி காலணிகளை வெளியே இழுத்து கண்ணாடி மேசையில் வைத்து வாடிக்கையாளருக்குக் காட்டினார். இதன் விலை 4,500 ரியால்கள் என்று கூறப்படுகிறது, அதாவது இது இந்திய ரூபாயை (ரூ. 1,00,305) மதிப்பு ஆகும்.

ஊழியர் இந்த செருப்பினுடைய சிறப்பு அம்சங்களை, வாங்குபவருக்கு எடுத்துக்காட்டுவதைக் காண முடிந்தது. இந்த ரப்பர் மிகவும் மென்மையாக இருக்கும் உங்கள் காலில் போடும்போது நன்றாக இருக்கும் என்று கூறுகிறார். இருப்பினும், இந்த விலைக்கு இந்த செருப்பா? என நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இந்த வீடியோ மிகவும் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், இந்தியர்கள் பலரும் “இந்தியர்களான நாங்கள் இந்த செருப்புகளை கழிப்பறை காலணியாக பயன்படுத்துகிறோம்” எனவும், என்னங்க எங்க ஊரில் இந்த செருப்பு மிகவும் குறைவான விலை தான்”  எனவும் கலாய்த்து வருகிறார்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்