இலங்கை தொடருக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்? வெளியான அதிரடி தகவல் !!

Suryakumar Yadav as Indian Captain for SL Tour

SLvIND : இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடனான சுற்று பயணம் மேற்கொண்ட சூப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது இந்த மாத இறுதியில் இலங்கை அணியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த தொடருக்கான அணியை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை, இருப்பினும் இதற்கு முன் இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தங்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இப்போது வேறொரு ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மானான சூரியகுமார் யாதவ் இலங்கை அணியுடன் நடைபெற இருக்கும் 3டி20 போட்டி கொண்ட தொடருக்கு கேப்டனாக செயல்படவுள்ளார் என பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் இந்த தகவலானது வெளியாகி இருக்கிறது.

இதற்கு முன் கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணியுடனான டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு அந்த தொடரையும் கைப்பற்றி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கவுதம் கம்பீர் பயிற்சியில் களமிறங்க இருக்கும் அதிகாரப்பூர்வமான இந்திய அணியை இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. இதனால், அந்த தொடருக்கு வெறும் 10 நாட்களே இருப்பதால் விரைவாக அணியை பிசிசிஐ அறிவிப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI