மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.! திருமா உறுதி.!

VCK Leader Thirumavalavan speech about Manjolai Estate Issue

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதி காடுகளில் சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு தனியார் நிறுவனங்கள் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது. இந்தக் குத்தகை காலம் 2028ஆம் ஆண்டு முடிவடைகிறது. மாஞ்சோலை சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு இடங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கி அங்குள்ள தோட்டங்களில் பணியாற்றி வந்தனர்.

இப்படியான சூழலில், தனியார் நிறுவனங்கள் தங்கள் குத்தகை காலத்தை முன்னதாவே முடித்துக்கொண்டு, அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற கூறியது. தனியார் நிறுவனங்களின் இந்த முடிவை அடுத்து, தேயிலை தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தமிழக அரசின் வனத்துறை கையகப்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இப்படியான சூழலில், மதுரை உயர்நீதிமன்றம், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தற்போது வெளியேற வேண்டாம் என்றும், அவர்களுக்கு உரிய மறுவாழ்வு வசதிகளை மேற்கொள்ளும் வரையில் உரிய அவர்களை வெளியேற கூற கூடாது என உத்தரவிட்டது.

இந்நிலையில், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் குறித்து, விசிக தலைவர் திருமாவளவன், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்தினர்.

அப்போது திருமாவளவன் பேசுகையில், மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும். அதற்கு உரிய தீர்வு, நீதி வழங்க வேண்டும். மாஞ்சோலை விவகாரத்தை அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வோம், அரசுக்கு உரிய அழுத்தம் கொடுப்போம். 8000 ஏக்கர் காட்டில் 23 ஏக்கர் தான் புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளனர். அதனால் அது தொழிலாளர்கள் நலனை பாதிக்காது.

பாதிக்கப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்கள் பாதிப்பை புகார் மனுவாக தந்தால் அதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். மாஞ்சோலை விவகாரத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் தற்போது இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்