கண்டுகொள்ளாத சூர்யா…சுதா கொங்கராவுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!!
புறநானூறு : இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தினை தொடர்ந்து புறநானூறு படத்தினை இயக்குவார் எனவும், படத்தினை சூர்யாவின் 2-டிநிறுவனமே தயாரிக்கிறது எனவும், படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் எனவும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆனால், படம் சற்று பெரிய படம் என்பதால் கொஞ்சம் அதிகமாக கால்ஷீட் கொடுக்கவேண்டி இருக்கிறதாம். இருப்பினும், சூர்யா இந்த படம் மட்டுமின்றி இன்னுமே பல படங்களை தொடர்ச்சியாக கமிட் செய்து வைத்து இருப்பதன் காரணமாக இந்த படத்திற்கு அவரால் சரியான கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம். இதன் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
அந்த தகவலை தொடர்ந்து, படத்தில் சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் எனவும், தனுஷ் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாக தொடங்கியது. இருப்பினும், இது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து, படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால், சூர்யா இந்த புறநானூறு படத்தை கொண்டுகொள்ளாத நிலையில், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்து விட்டாராம். எந்த ஹீரோவை வைத்து எடுக்கலாம் என சிவகார்த்திகேயன் யோசித்து கொண்டு இருந்த நிலையில், அவருக்கு சிவகார்த்திகேயன் கை கொடுத்து இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று கதையை கேட்டு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
முதற்கட்டமாக படம் பேச்சுவார்தையில் இருந்த நிலையில், தற்போது படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாம். அது மட்டுமின்றி, படத்தினை அறிமுக தயாரிப்பாளர் ஆகாஷ் கிருஷ்ணன் என்பவர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.