பிரச்சனையை முடிச்சுவச்சது அவர் தான் …! கம்பீர்-கோலி சர்ச்சையை குறித்து அமித் மிஷ்ரா பேச்சு .!
அமித் மிஷ்ரா : கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணிக்கும் பெங்களூரு அணிக்கும் நடைபெற்ற ஒரு போட்டியின் போது விராட் கோலிக்கும், ஆப்கான் வீரரான நவீன்-உல் ஹக்கும் மோதல் ஏற்பட்டது. அதன் விளைவாக போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அது அப்போது சுற்றி இருந்த வீரர்கள் வந்து கலைத்தனர், அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே பனிப்போர் என்பது நடந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பிர் கொல்கத்தா அணியிக்கு ஆலோசகராக செயல்பட்டார்.
அப்போது இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு போட்டியின் போது களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலியை தேடி இடைவேளையின் போது கவுதம் கம்பீர் வந்து அவரை கட்டி அனைத்து இந்த சர்ச்சைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தார்.
இந்த சம்பவத்தை பற்றி இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருந்தார். அவர் பேசுகையில், “கவுதம் கம்பீரின் நல்ல ஒரு குணத்தை பற்றி கூற வேண்டும் என்றால், விராட் கோலி அவரிடம் செல்லவில்லை. கம்பீர் தான் அவரிடம் சென்று ‘எப்படி இருக்கீங்க? குடும்பம் எப்படி இருக்கிறது ? என்று நலம் விசாரித்தார்.
அப்படி பார்த்தால் கம்பீர் தான் இந்த பிரச்சனையை முடித்து வைத்தார். இதில் கம்பீர் அவரது பெரிய மனதை காட்டி இருக்கிறார்.உண்மையில் விராட் கோலி தான் சீனியர் என்ற முறையில் கம்பீரை தேடி சென்று ‘இதை இங்கயே முடித்து கொள்வோம்’ என்று கூறி பேசி இருக்க வேண்டும்”, என்று அமித் மிஷ்ரா கூறி இருந்தார்.