அலப்பறை கிளப்புறோம் தலைவரு நிரந்தரம்! ‘SIIMA’ டாப் நாமினேஷன் பட்டியலில் ஜெயிலர்!
SIIMA 2024 : கடந்த 12 ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் சிறந்தவர்களை தொடர்ந்து கவுரவித்து வரும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய விருதுகளான ‘SIIMA’ ஆனது இந்த ஆண்டு (2024) நிகழ்ச்சியை துபாயில் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து, அதிக அளவு நாமினேஷனில் பெறப்பட்ட படங்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டன. அதில், கடந்த 2023-ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கில் தசரா, தமிழில் ஜெயிலர், காற்றா மற்றும் 2018 ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது.
ஜெயிலர் (தமிழ்)
- சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகர், துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்), சிறந்த வில்லன், சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர் என 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தசரா (தெலுங்கு)

காற்றா (கன்னடம்)
- சிறந்த படம் , சிறந்த இயக்குனர் , சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர் சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) , சிறந்த பின்னணிப் பாடகி (பெண்)
சிறந்த பாடலாசிரியர் , சிறந்த அறிமுக நடிகை என 8 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2018 (மலையாளம்)
-
- சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் , சிறந்த நடிகர் ,சிறந்த இசையமைப்பாளர், துணை வேடத்தில் சிறந்த நடிகர் , சிறந்த ஒளிப்பதிவாளர்
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் , சிறந்த நடிகர் ,சிறந்த இசையமைப்பாளர், துணை வேடத்தில் சிறந்த நடிகர் , சிறந்த ஒளிப்பதிவாளர்
SIIMA AWARDS IN DUBAI THIS YEAR: ‘DASARA’, ‘JAILER’, ‘2018’, ‘KAATERA’ LEAD NOMINATIONS… The South Indian International Movie Awards [#SIIMA] is back with its 12th edition to celebrate the best of South Indian cinema… #SIIMA2024 event will be held in #Dubai on 14 and 15 Sept… pic.twitter.com/9YhD1wRwqn
— taran adarsh (@taran_adarsh) July 16, 2024