விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி.! எம்.எல்.ஏவாக பதவியேற்றார் அன்னியூர் சிவா.!
சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று சபாநாயகர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உயிரிழந்த நிலையில், அங்கு கடந்த ஜூலை-10 ம் தேதி (புதன்கிழமை) அன்று விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.
நடந்த முடிந்த இந்த தேர்தலின் வாக்கு எணிக்கையானது கடந்த ஜூலை-13ம் தேதி நடைபெற்றது. இதில், அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவையில் உள்ள சபாநாயகர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, பேரவையில் திமுக உறுப்பினர்களின் பலம் 133 ஆக அதிகரித்துள்ளது.
எம்எல்ஏ-வாக பதவியேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்லாமல், வாக்களிக்காத மக்களுக்கும் தேவையான நலத்திட்டப் பணிகளைச் செய்வேன்” என்று உறுதி அளித்துள்ளர்..