ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

Armstrong

ஆம்ஸ்ட்ராங் கொலை :  வழக்கில் கைதான ஒருவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பகுஜன் சமாஜ்வாடி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் 5-ஆம் தேதி சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்ப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த கொலை தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அந்த  11 பேரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த 11 பேரில் திருவேங்கடம் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, அவரிடம் விசாரணை செய்ய இன்று அவரை போலீசார் சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றார்கள். அப்போது, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்றவேண்டும் அதனை கேட்டு காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தனர்.

அப்போது, திருவேங்கடம் மறைத்து வைத்து இருந்த பொருட்களை வைத்து காவல்துறையினரை தக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக,  தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடத்தை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனையடுத்து,  திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகிறார். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் மீது  ஏற்கனவே, 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்