மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி!

Mamata Banerjee - Trinamool Congress

திரிணாமுல் காங்கிரஸ் : மேற்கு வங்கத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில், அனைத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தின் ரணகத் தக்ஷின், பாக்தா, ராய்கஞ்ச், மணிக்தலா ஆகிய 4 ட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது.

இன்று காலை 8 மணி முதல் இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று முடிந்தது. அதன்படி, உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் தொகுதியில், கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் போட்டியாளரான மனாஸ் குமார் கோஷை வெற்றி பெற்றார். கல்யாணி 86,479 வாக்குகளும், கோஷ் 36,402 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாக்தா சட்டமன்றத் தொகுதியில் டிஎம்சியின் ராஜ்யசபா எம்பியும், மட்டுவா தலைவருமான மம்தாபாலா தாக்கூரின் மகளும், டிஎம்சியின் மதுபர்ணா தாக்கூர், தனது போட்டியாளரான பாஜகவின் பினய் குமார் பிஸ்வாஸை விட 33,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுபர்ணா தாக்கூர் 1,07,706, பிஸ்வாஸ் 74,251 பெற்றனர்.

மேலும், பர்கானாஸில் உள்ள ரணகாட் தக்ஷினில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் பிஸ்வாஸை விட  டிஎம்சியின் முகுத் மணி அதிகாரி 39,048 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொல்கத்தாவில் உள்ள மணிக்தலா தொகுதியில் டிஎம்சி வேட்பாளர் சுப்தி பாண்டே, பாஜகவின் கல்யாண் சௌபேயை விட 31,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்